• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

என் இனிய பொன் நிலாவே

தேரிழுத்து தெருவினிலே
விடுவதும் தான் ஒரு நிகழ்வே
என்றிருக்கும் போதினிலே
அக்கூற்றும் இகழ்வதையே
குறிககும் என அறிந்த அவள்
எனை இழுத்து தெருவில் விட
எண்ணியது போலேதான்
என்னை இங்கு அழைத்து வந்தாள்

அரட்டை அறை ஓரத்தில்
அழகுப்பெண்கள் கூட்டத்தில்
கவிதை என நான் சொல்லி
கண்டதைத்தான் உலறிவிட
அதை கண்ட அவளும் தான்
எனை இங்கு அழைத்து வர
தேறாக இருந்த நானோ
தெருவில்தான் நின்றுவிட்டேன்..

விளையாட்டு என சொல்லி
வேடமோன்றை கட்டி விட்டு
களத்தினிலே எனை வீழ்த்த
கங்கணமும் கட்டிக்கொண்டு
வெற்றி எனும் ஒன்றை
நான் எட்டும் நேரத்தில்
தட்டி அதை பறித்து விட்டு
தங்க மங்கை ஆனாலே..

அது போதும் என்றெண்ணி
அத்துடன் நான் ஒதுங்கிடவே
அதைக்கண்ட அவளோ
எப்படி உனை விடுவேனென்று
செல்லுமிடம் எல்லாமும்
எனை சீண்டிடவே வந்திடுவாள்
சொல்லும்மொழி கொண்டேதான்
என் சுயத்தை அவள் வென்றிடுவாள்...
Yow ne patuku antha ponnu vitu vanthuta athu enta kekuthu ne enga nu
 
Back
Top