• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

ஒரு காட்சி....இரு கற்பனைகள்

Squareroot

Active member
வணக்கம் 🫶 மக்களே. .மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 🥳
index.php

வானத்தில் நிலவை மேகம் கடந்து செல்வது, மேகத்தினால் நிலா மறைக்கப்படுவதும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதை நாம் அனைவரும் பார்த்து ரசித்ததும் உண்டு. இதை கண்ட கவிஞர் பழனி பாரதி, வைரமுத்து தங்களது கற்பனையை அந்த இயற்கை நிகழ்வோடு ஏற்றி கீழேயுள்ள பாடல் வரிகளை படைக்கிறார்கள்.

1. காதல் என்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா பாடல், Movie Name :Aval Varuvala (Lyricist : Pazhani Bharathi)

“நிலவை உரசும் மேகம், அந்த நினைவை நினைத்தே உருகாத ”

பழனி பாரதி, மேகம் (காதலன் :ஆண்பால் ), நிலவு (காதலி, பெண்பால் ) கடந்து சென்ற பிறகும் அதன் நினைவை நினைத்து உருகுவதாக கற்பனை செய்கிறார்.

2.இளைய நிலா பொழிகிறதே (Movie:பயணங்கள் முடிவதில்லை, Lyricist:Vairamuthu)

“வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்“

வைரமுத்து, நிலா பனி மழையில் நினைவதாகவும் அதனால் மேகத்தை துவாலை யாக பயன்படுத்தி நீர் துளிகளை துடைப்பதாகவும் கற்பனை செய்கிறார்.

“வானம் எனக்கொரு போதி மரம் , நாளும் எனக்கது செய்தி தரும் ”
அப்படினு சும்மாவா சொன்னாங்க. வானத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் வெவ்வேறு கோணத்தில் கற்பனைகள் எழுகிறது. கவிதைகள் பிறக்கிறது

Note: இதே போல் இயற்கையாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தன் கற்பனையை ஏற்றிக் கூறுவதை தற்குறிப்பேற்ற அணி என்பார்கள்.

If you know any other lyrics in tamil songs based on this scene..Please share.

Tataaaaaaa
 
Attachments

  • IMG_0194.jpeg
    IMG_0194.jpeg
    14.1 KB · Views: 72
கோபம் கொள்ளும் நேரம்…
வானம் எல்லாம் மேகம்…
காணாமலே போகும் ஒரே நிலா❤️

கோபம் தீரும் நேரம்…
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும்
அதே நிலா ❤️❤️

மிகவும் அழகான வரிகள். கோபம் கண்ணை மறைக்கும் என்னும் சொல்லை போல, நாம் கோபமாக இருக்கும் பொழுது, நம் சிந்தனைகளும் பார்வைகளும் மங்குகிறது.

நிலா என்பது இங்கே காதலை குறிக்கிறது. கண்களுக்கு புலப்படும் காட்சிகளில், நிலவை மீறிய அழகு எதுவுமில்லை. கண்களுக்கு புலப்படாத உணர்வுகளில், காதலை மிஞ்சும் அழகும் எதுவுமில்லை.

நமக்கு கோபம் வரும்பொழுது, அவர்கள் நம் மீது வைத்த காதலை நாம் காண தவருகிரோம். TIME IS A BEST HEALER. ஊடல்கள் அல்லது கோபங்கள் வரும் சமயங்களில் சிறிது காலம் கொடுங்கள். நிலா மறையுமே தவிர, தொலையாது. நிலா என்றும் நிலா தான். மேகம் விலகும், காதல் மேம்படும்
 
Last edited:

Seme Machi♥️
 
வணக்கம் 🫶 மக்களே. .மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 🥳
index.php

வானத்தில் நிலவை மேகம் கடந்து செல்வது, மேகத்தினால் நிலா மறைக்கப்படுவதும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதை நாம் அனைவரும் பார்த்து ரசித்ததும் உண்டு. இதை கண்ட கவிஞர் பழனி பாரதி, வைரமுத்து தங்களது கற்பனையை அந்த இயற்கை நிகழ்வோடு ஏற்றி கீழேயுள்ள பாடல் வரிகளை படைக்கிறார்கள்.

1. காதல் என்ன கண்ணாம்பூச்சி ஆட்டமா பாடல், Movie Name :Aval Varuvala (Lyricist : Pazhani Bharathi)

“நிலவை உரசும் மேகம், அந்த நினைவை நினைத்தே உருகாத ”

பழனி பாரதி, மேகம் (காதலன் :ஆண்பால் ), நிலவு (காதலி, பெண்பால் ) கடந்து சென்ற பிறகும் அதன் நினைவை நினைத்து உருகுவதாக கற்பனை செய்கிறார்.

2.இளைய நிலா பொழிகிறதே (Movie:பயணங்கள் முடிவதில்லை, Lyricist:Vairamuthu)

“வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்“

வைரமுத்து, நிலா பனி மழையில் நினைவதாகவும் அதனால் மேகத்தை துவாலை யாக பயன்படுத்தி நீர் துளிகளை துடைப்பதாகவும் கற்பனை செய்கிறார்.

“வானம் எனக்கொரு போதி மரம் , நாளும் எனக்கது செய்தி தரும் ”
அப்படினு சும்மாவா சொன்னாங்க. வானத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் வெவ்வேறு கோணத்தில் கற்பனைகள் எழுகிறது. கவிதைகள் பிறக்கிறது

Note: இதே போல் இயற்கையாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தன் கற்பனையை ஏற்றிக் கூறுவதை தற்குறிப்பேற்ற அணி என்பார்கள்.

If you know any other lyrics in tamil songs based on this scene..Please share.

Tataaaaaaa
In that same song ,

வான மகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

Sunset color shyness nu soli.. sky black dress maathuthu nu yosikrar. How beautiful
 
Nice Venz..but Same song ila...Intha song "Ithu oru Pon Malai Pozhuthu " & Vairamuthu First ezhuthuna song Ithu than...Avaruku Kudutha situation : Malai nerathil ,Oru latchiya vathi kana kangiran...😍Beautifully he coined the words #Ithu oru Pon Malai Pozhuthu ,Vanamagal Nanugiral ,Veru udai Punugiral
 
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது செல்வது?
என்று நான் உன்னை சேர்வது?
 
வெளியூர் போகும் காற்றும்…
ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்…
பிரிதல் என்பது இலையுதிர் காலம்…
நிச்சியம் வசந்தம் வரும்…
 
வெளியூர் போகும் காற்றும்…
ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்…
பிரிதல் என்பது இலையுதிர் காலம்…
நிச்சியம் வசந்தம் வரும்…
ithu ena song?
 
ithu ena song?
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே…
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே…
பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை…
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை

From காதல் சடுகுடு movie
 
Back
Top