What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

காதல் கவிதை

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
#சொல்ல_முடியாத_அளவிற்கு_உன்_மேல்_காதல்.... தோன்றியதனால் .........
கோடி நட்சத்திரங்களை விடவும் அனைத்து நாளும் உன்னை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன்.......
கண்ணுக்கு நிறைய கண்ணீர் மல்க இதயத்தின் பாரம் கூடிப்போனதால்.....
உன்னை சொந்தமாக்கிக் கொள்ளாமல் கனவில் ரகசியமாய் மட்டும் சென்று உன்னை முத்தமிட்டேன்........💞
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
கட்டிய மனைவி சலிப்படைந்து,
எட்டி உதைப்பதற்குள்
மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளை சனியனே
என்று சொல்வதற்குள்
மரணம் வந்துவிட வேண்டும்.

சொத்து சேர்த்த தகப்பனை
தவிக்க விட்டு,
சொத்துக்கு மக்கள்
அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து
நாளை போக வேண்டும் என்று
கடவுளை மகள் வணங்குவதற்குள்
மரணம் வந்துவிட வேண்டும்.

மூன்று வேளை உணவில்,
ஒருவேளை உணவை கொடுத்து,
தின்னு தொலை சனியனே என்று சொல்லும் நிலை வருவதற்க்கு முன்
மரணம் வந்து விட வேண்டும்.

உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.

நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில்
மரணம் வந்துவிட வேண்டும்.

பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி
எட்டி உதைப்பதற்குள்
மரணம் வந்துவிட வேண்டும்.

நீ எல்லாம் இருந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
அன்பின் இனிய இரவு வணக்கம் 🌹❤️🌹

ஆணின் வீரத்தினால் சூழப்பட்டு
இருக்கும்

பெண்ணின் உலகம் மிக
அழகானது 💙

பெண்ணின் அன்பினால் சூழப்பட்டு
இருக்கும்

ஆணின் உலகம் பேரழகானது ❤

உன் அன்பென்னும்
எண்ணெய் வற்றாத வரை

நானுமோர் சுடர்விட்டெரியும்
விளக்கே..💞

இளமை திரும்பவில்லை
மாறாக, இதயம் மலர்ந்தது மீண்டும்..!

அதிகார பார்வை என்றாலும்
அடங்கி தான் போகிறேன்

உன் அன்பிற்காக ❤
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
💖💖💖 ஹாய் 💞💞💞
♥️♥️♥️நான் உன்னை காதலிக்க
💕💕💕 அன்போடு வரவேற்கிறேன் 🌹

பார்த்ததடி காத்திருந்து
தேங்கியிருக்க
மீண்டு வந்து மீண்டு வந்து
நினைவில் இருக்க
விழி உருக விழி உருக
தேங்கியிருக்க
மனம் நிறைய மனம் நிறைய
காத்து இருக்க ...

குணம் கண்டதில்லை
மனம் கண்டதில்லை
நடை கண்டதில்லை
செயல் கண்டதில்லை ..

எதைக் கொண்டு நம்பி
இவள் விழிகள் பார்க்க
எதை வைத்து காதல்
இவள் நெஞ்சில் பூக்க !
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
கடும் பகலிலுங்கொடும் பனியெனப்
பெய்யும் மார்கழிப் பின்னிரவில் மதிமயக்குந்திங்களாய்
தன் முகம் ஒளிர்ந்த வண்ணம் அவளுறங்கிக் கொண்டிருக்கப்

பூனைப் பாதம் கொண்டவன் படியிறங்கினான்...!!

புற்காட்டு மூங்கில் நுனியில் நிலா பனித்திருக்க
அவன் நாடு கடந்து காடேறினான்..

நடுநிசிதன் மௌனம் கலைத்து
ராக்கிளிகள் சிறகடிக்க
அலையடித்த இருள்
தொடுவானம் தொட்டுத் திரும்பியது...!!

தேடித்திரிந்து தேர்ந்த மரத்தடியொன்றிலமர்ந்து தேடத் துவங்கினானவன் துன்பமற்றிருத்தலின் சூட்சுமத்தை..!!

ஆசையை துறக்குமாசைகொண்டி -
ம்சையுற்றவன்
அகிம்சைக்கு வித்திட
அவனமர்ந்த மரத்தில் பூத்திருந்தது
யசோதரையின் விரகச் சூடு..!

அச்சூட்டின் கங்கில்
புடம் போட்டனவோ
பிற்காலத்தில் செங்கோல்கள்...?

இன்னமும்..

அடக்கியாளத் துடிக்கும்
அடங்கா திமிர் கொண்ட கூட்டம் ஆயுதமேந்திப் பாயும் பாதையோரம் பட்டுப் போன போதிமரத்தில்
அழுகி கிடக்கிறது தூக்கிலிடப்பட்ட
அகிம்சையின் உடல்...!!

ஆசை துறத்தலும் அகிம்சையும்
புத்தனின் புலம்பலாக மாற...

மீட்சிபெறத் தவிக்கும்
மானுடக் கண்ணீரின்
மிச்ச ஆவணமாயென்
முடிவுறா கவிதைகள் .....

ஞானமுறங்கும் மரங்கள் தேடி
தினந்தோறும் அலைகின்றன...!!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
வாழ்க்கை என்பது நமக்கு வாய்த்த ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விடாதீர்கள்...

கடமை அதை நிறைவேற்றுங்கள்...
ஒரு லட்சியம் அதை சாதியுங்கள்...
சோகம் அதை தாங்கிக் கொள்ளுங்கள்.

அதுவே ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் நடத்தி முடியுங்கள்.

காலை வணக்கம் நண்பர்களே. 🙏🏼 ❤️💞♥️🌹👨‍❤️‍👨💐⭐🌷💚☀️🙏🏼.
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
பெண் பார்க்கும் படலம்... ஏழைப் பெண்களின் ஏக்கம்...

எப்போதும் போலவே
அன்றும் விடிந்தது,
அவளுக்கும்
அழுகை வந்தது,
எப்போதும் போலவே
பெண் பார்க்கும் படலம்
அன்றும் அலுத்து விடுமோ..?

ஏழு பேர் வந்து போனது போலவே
எட்டாவதாக வருபவனும்
எட்டாமல் போய் விடுவானோ..?

யாருக்கென்ன கவலை
காயப்போவது
மல்லிகைப்பூ மட்டுமல்ல
அவளும் தானே...?

அலங்கரித்து
சிங்காரமாய் நடந்து வர
இது முதல் தடவை அல்லவே,
தனக்கு தானே கேட்டுக் கொண்டு
ஏனோதானோவென வந்தாள்....

வழக்கமான
வணக்க அரங்கேற்றத்தை
அன்றும் அரங்கேற்றினாள்...

வந்த அத்தனை பேரும்
நிலம் பார்த்தனர்
நகை பார்த்தனர்,
வீடு பார்த்தனர்,
வசதி பார்த்தனர்,
திருமணத்திற்காக பெண் பார்க்க
யாரும் வரவில்லை...

புண்ணைக் கொத்தும் காக்கைகளுக்கு
மாட்டின் நோவு
எப்படித் தெரியும்.?

வெத்தலையின் காம்புடன்
பெண்ணின் குறைகளையும்
கிள்ளி எறிந்து பேசினார்கள்...
மாடு விலை பேசும்
வியாபார (திருமண) சந்தையில்
பெண் மட்டும் என்ன பாம்பா..?
பல்லைப் பிடித்து பார்க்கையில்
கையில் கொட்டுவதற்கு....

நிராகரிப்பு என்பது
நிர்வாண நிலையினும் கொடிது...

காயா இல்லை பழமா
என்று அவர்கள் கேட்பதிலே
காய்ந்த பழமாகி விடுகிறாள்...

சினிமாவிற்கு வந்தது போல
சிற்றுண்டியுடன்
நேரத்தை போக்கிவிட்டு
வியாபாரிகள் வெளியே போனார்கள்....

கதவோரம் சாய்ந்து நின்று
அவள் சொன்னாள்,
அடுத்த முறையாவது
பெண் என்னைப் பார்க்க வாருங்கள்....

( எத்தனையோ ஏழை சகோதரிகளின் மனம் நினைக்கும் எண்ணங்களின் வாயிலாகவே இக்கவிதை.. நிறைய மன வலியுடன்.)
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
வலிகளையும் கடந்து
தன்னம்பிக்கையோடு
வரும் புன்னகையைவிட
பேரழகு ஏதுமில்லை...

அழகு என்பது ரசிக்கவே...

அன்பு மட்டுமே போதும்
அழகாய் வாழ்ந்திட💚💚💐💐🌹🌹❤❤
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
அன்பின் இனிய காலை வணக்கம் 🌹 ❤️ 🌹

செல்போன் சிணுங்கிட
கூவுகிற கவனம் அன்பே

ஒரு குறுஞ்செய்தி
அன்பே நீதானே..❤️

பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் அன்பே அன்பே நீதானே...❤️

உன் நினைவோடு வாழ்வேனே தவிர ஒருபோதும்

உன் இடத்திற்கு வேறு ஒருவரை வைத்து வாழ மாட்டேன்..💕💞

தூரங்கள் கூடும் போது தான்
உணர்ந்தேன் ...

நீயெனக்கு எவ்வளவு முக்கியம்
என்பதை ❤

அளவாய் காதலிக்க தெரியாத
பெண்களுக்கு,

அளவாய் கோபம் கொள்ளவும்
ஒருபோதும் தெரியாது ❤

உன் அழகில்
நான் மயங்கியது உண்மை

ஆனால்,
உன் அன்பில்தான் நான் மலர்ந்தேன்..!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
#முகநூல்*..

*முகம் தெரியாது*
*முகவரி தெரியாது*
*மதம் தெரியாது*
*மொழி தெரியாது*
*வயது தெரியாது*
*நட்பு மட்டுமே தெரியும்*

*கலாய்ப்போம்*
*வம்பிழுப்போம்*
*வன்மம் இருக்காது*

*பேசுவோம்*
*பிடிக்கவில்லையெனில்*
*புன்னகையுடன்* *பிரிவோம்*

*கண்ணீரின்*
*ஆறுதலாய் நட்புகள்*

*சகோ , frd , ஜி bro ன்னு*
*எத்தனை உறவுகள்*

*நட்பில் ஆண் பெண்*
*பேதமிருக்காது*

*கடல் கடந்து*
*கண்டம் கடந்து*

*தனிமையை போக்கும்*
*நட்புகள்*

*மனிதர்களின் அத்தனை*
*முகங்களும் முகநூல் நட்பாய்*

*காணவில்லையென்றால்*
*தேடும் நட்புகள்*

*முகநூல் நட்புக்களே *
*நீங்கள் மட்டும்* *இல்லையெனில்*
*எத்தனையோ* *இதயங்கள்*
*அழுத்தத்தில்* *வெடித்திருக்கும்*

*இந்த நூற்றாண்டில்*
*மனிதனின்* *இணையற்ற* *கண்டுபிடிப்பு*

*மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதால்*
*மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா*?

*முகநூலும் அப்படிதான்*
*எச்சரிக்கையுடன் கையாண்டால்*
*என்றும் மகிழ்வே*...

*அனைத்து முகநூல் நட்புகளுக்கும்*
..🌷🌷🌷🌷 🌷 🌷 🌷 🌷 🌷

இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙏🏼 ♥️ ❤️ 🌹
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
உன்னைப் பார்த்த நொடியில்
என்னைத் தொலைத்தேன்/
உன்
விரல்களின் இடையில்
என்
விரல் கோர்த்தேன்/
நீயில்லா நானுமே
நீரில்லா மேகமே
மழை தூவும் வானமே
காதல் மழை பொழிவாயா?
இரவில்லா வானத்தில்
குயில்பாடும் கானத்தில்
காலைப்பனி நனைந்தேன்
காதல்சுகம் கண்டேன்/
இரவெல்லாம் நீண்டிருக்க
கனவெல்லாம் காத்திருக்க,
நீ
வருவாயா?
காதல் சுகம் தருவாயா?
வழியெல்லாம் விழிவைத்து
விழிக்குள்ளே உன்னை வைத்து
உனக்காக காத்திருப்பேன்
பூவாகப் பூத்திருப்பேன்/
சொல்லாத சொல்லெடுத்து
குத்தாத முள்ளெடுத்து
மணமாலை நான் செய்து
மணமாற சூட்டுவேன்//
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
நான் இத பத்தி பேசுரது தப்பா சரியானு தெரியவில்லை !

தப்பா இருந்தா மன்னித்து விடுங்கள் 🙏🙏 !!

மாதத்தில் 27 நாட்கள் நாம்மோடு நமக்கு
சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 3 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம் உணர்வது இல்லை...!!
அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை..

பொது இடங்களில் செல்வதும் இல்லை..!!!
அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை, அதை அவளால் தடுக்கவும் முடியாது...!

தன் சகோதரனிடம் கூட சொல்ல முடியாது அந்த வேதனையை...!!

ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது என தெரியவில்லை..!!!

அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....!

உனக்காக 27 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 3, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்...!!

அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..!!!
அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...!

உன் ஆடையில் ஏதோ ஒரு சிறிய கரை பட்டாலே அசிங்கமாக நினைக்கும் நீ அவளை பார்த்து சிரித்துக் கொள்வது ஏனோ...!!

அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது..!!!
நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்...!

ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத கடவுளுக்கு நன்றி...!!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
♥வெள்ளை
கவியாே
அவள்
வெளிச்ச
பூவோ

அவள்
முல்லை
மலராே
சந்தன
காடோ

செம்
மாதுளை
கனியாே
அவை
அசைவது
சரியாே

இடையென
வளைந்தன
எல்லாம்
குளிர் நிலை
நதியாே

அவை
மனதை
அசைப்பதும்
வதைப்பதும்
முறையாே

அவை
ஏழ்வண்ண
வானவில்
மேடையாே
அடர் கார்புற்
வனமாே

அங்கு
மலர்ந்தன
வைடூரிய
தாமரையோ

இலக்கணங்கள்
மீறியதே
அவள்
அழகாே

♥வைரங்களை
மடித்ததே
இதழாே

♥அமுதாே

♥தேனாே

♥திகட்டா
இனிப்போ

♥பெயர்
அவள்
ராட்சஷியாே
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
#எதிர்பார்ப்புகள் எத்தனை முறை
ஏமாற்றத்தை கொடுத்தாலும்
ஏதார்த்தங்களில்... எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்வதில்லை மனம்
சில நேரங்களில்...
சிலரிடத்தில்...💞
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மதிய வணக்கம் 🌹 ❤️ 🌹

என்னில் நீயாகி உன்னில் நானாகி
நம்முள் நாமானோம் ..💘

எண்ணமெல்லாம் நீயாக
வண்ணவுலகில் நான்…!❣️

இதயத்திற்கு கண்கள் இருந்தால் அது உன்னை தவிர வேறு எதையும் ரசிக்காது

இரவை பல வண்ணங்கள் அழகாக்கி
கொண்டிருந்தாலும்

உன்னை காணும்வரை
என்மனம் இருளே ..💞

எதையும் ஆள வேண்டுமென்ற ஆசையில்லை உன் அன்பில்

ஆழ்ந்திருக்க வேண்டுமென்ற
ஆசையை தவிர .. 💝
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
பெண் பார்க்கும் படலம்... ஏழைப் பெண்களின் ஏக்கம்...

எப்போதும் போலவே
அன்றும் விடிந்தது,
அவளுக்கும்
அழுகை வந்தது,
எப்போதும் போலவே
பெண் பார்க்கும் படலம்
அன்றும் அலுத்து விடுமோ..?

ஏழு பேர் வந்து போனது போலவே
எட்டாவதாக வருபவனும்
எட்டாமல் போய் விடுவானோ..?

யாருக்கென்ன கவலை
காயப்போவது
மல்லிகைப்பூ மட்டுமல்ல
அவளும் தானே...?

அலங்கரித்து
சிங்காரமாய் நடந்து வர
இது முதல் தடவை அல்லவே,
தனக்கு தானே கேட்டுக் கொண்டு
ஏனோதானோவென வந்தாள்....

வழக்கமான
வணக்க அரங்கேற்றத்தை
அன்றும் அரங்கேற்றினாள்...

வந்த அத்தனை பேரும்
நிலம் பார்த்தனர்
நகை பார்த்தனர்,
வீடு பார்த்தனர்,
வசதி பார்த்தனர்,
திருமணத்திற்காக பெண் பார்க்க
யாரும் வரவில்லை...

புண்ணைக் கொத்தும் காக்கைகளுக்கு
மாட்டின் நோவு
எப்படித் தெரியும்.?

வெத்தலையின் காம்புடன்
பெண்ணின் குறைகளையும்
கிள்ளி எறிந்து பேசினார்கள்...
மாடு விலை பேசும்
வியாபார (திருமண) சந்தையில்
பெண் மட்டும் என்ன பாம்பா..?
பல்லைப் பிடித்து பார்க்கையில்
கையில் கொட்டுவதற்கு....

நிராகரிப்பு என்பது
நிர்வாண நிலையினும் கொடிது...

காயா இல்லை பழமா
என்று அவர்கள் கேட்பதிலே
காய்ந்த பழமாகி விடுகிறாள்...

சினிமாவிற்கு வந்தது போல
சிற்றுண்டியுடன்
நேரத்தை போக்கிவிட்டு
வியாபாரிகள் வெளியே போனார்கள்....

கதவோரம் சாய்ந்து நின்று
அவள் சொன்னாள்,
அடுத்த முறையாவது
பெண் என்னைப் பார்க்க வாருங்கள்....

( எத்தனையோ ஏழை சகோதரிகளின் மனம் நினைக்கும் எண்ணங்களின் வாயிலாகவே இக்கவிதை.. நிறைய மன வலியுடன்.)
இயல்பாக பழகி ஒருவரை மற்றொருவர் தெரிந்து பின்னர் புரிந்துகொண்டு விரும்பி ஏற்றிடும் காதல்வாழ்கை இயற்கையாது.

இந்த இயற்கைக்கு முரணாக செயற்கையாக மூர்க்கத்தனமாக நிர்பந்திக்கபடும் பந்தங்கள் ஏதோ ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திட ஒரு ஏற்பாடு வேண்டுமானால் ஆகுமேயல்லது இனிக்கின்ற காதல்வாழ்வாகிட நிச்சயம் இல்லை.

சுயம்வரமென்று பெண்ணுக்கு முழுசுதந்திரம் கொடுத்த நிலையிலிருந்து அரேஞ்சுடு மேரேஜ் என்கிற நிர்பந்த நிலைக்கு இழிந்திருக்கிறது பாரத பண்பாடு. ஆனாலும் இங்ஙன தான் டைவர்ஸ் கம்மியாம் ஒலகத்துலயே. என்னமோ போங்க. ஒரு மண்ணும் புரியல.
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
இயல்பாக பழகி ஒருவரை மற்றொருவர் தெரிந்து பின்னர் புரிந்துகொண்டு விரும்பி ஏற்றிடும் காதல்வாழ்கை இயற்கையாது.

இந்த இயற்கைக்கு முரணாக செயற்கையாக மூர்க்கத்தனமாக நிர்பந்திக்கபடும் பந்தங்கள் ஏதோ ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திட ஒரு ஏற்பாடு வேண்டுமானால் ஆகுமேயல்லது இனிக்கின்ற காதல்வாழ்வாகிட நிச்சயம் இல்லை.

சுயம்வரமென்று பெண்ணுக்கு முழுசுதந்திரம் கொடுத்த நிலையிலிருந்து அரேஞ்சுடு மேரேஜ் என்கிற நிர்பந்த நிலைக்கு இழிந்திருக்கிறது பாரத பண்பாடு. ஆனாலும் இங்ஙன தான் டைவர்ஸ் கம்மியாம் ஒலகத்துலயே. என்னமோ போங்க. ஒரு மண்ணும் புரியல.
ஆனால் இன்றைய காலத்தில் உண்மையான காதலை பார்க்க முடியவில்லை அதிலும் பெரும்பாலான காதலர்கள் பள்ளி பயிலும் பருவத்திலே வருகிறது, அதிலும் பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும் ஆனென்றால் நல்லவனா கெட்டவனா கெட்டாக இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறது இன்றைய காதல் எவ்வளவு சீக்கிரம் காதல் வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்ததும் சண்டை வருகிறது,
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மாலை வணக்கம் 🌹❤️🌹

நினைவை தூதனுப்பி உன் உலகுக்குள்
அழைத்து வந்து விடுகிறாய் என்னை ...💝

உன் இடைவிடாத நெருக்கம்
என் ஆயுள் முழுவதும் வேண்டும்

உன் அன்பெனும் காதல் கைதியாய் நான்....!!!

உன்னிடம் தேவை என்று
பெரிதாக எதுவுமே இல்லை..

எனக்காக கொஞ்ச நேரமும்,
ஒரு சிறு அன்பைத் தவிர...❣️

மனதின் வெறுமையையும்
நிறைத்து விடுகிறாய் நினைவில் ...❤️

ஒரு முறையேனும்
என் திசை நோக்கு ..

என் பயணம்
இனிதே நிறைவடையும் ..❣️
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
♥குண்டு
குண்டு
கன்னக்காரி

குச்சி
மிட்டாய்
மூக்குக்காரி

பஞ்சு
மிட்டாய்
உதடுக்காரி

ஆரஞ்சு
பழ
உடம்புக்காரி

வாழ
பூ
கழுத்துக்காரி

பொன்
சிவப்பு
மாதுளை
பழத்துக்காரி

வத்தின
புலங்காய்
இடுப்புக்காி

வள வளக்கும்
வாழைதண்டு
காலுக்காரி

சிவப்பு
தாமரை பூ
கீழ்
உதட்டுக்காரி

வெண்டைக்கா
நீளத்து
விரலுக்காரி

வெளுக்க
வெளுக்க
சிவந்து
போன
அவ வெள்ளைக்காரி

மொத்தமா
அழகுல
அவ என்ன
கொள்ளை
அடிச்சுப்பட்ட

அடங்காத
கொலைக்காரி

ராட்சஷி
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
மல்லிகை
மலர்ந்தது மலர் செடியில்

தான்
என்ற போதும் அது மகிழ்வது

என்னவோ
உந்தன் தலைமுடி மீது

அமர்ந்திருக்கும்
தருணங்களில் தான்

பெண்ணே!
எனக்கு ள் உன்னை பற்றி

உனது
பேரழகை பற்றி

கருத்தாழம்
மிக்க காதல் கற்பனை

உணர்வுகளை
மனதிற்கு ள் மகிழ்ச்சி யாக

பிரசவிக்க
உதவுகிறது என்பது ம்

பேருண்மை
ஆகும் பெண்ணே!
 
Top