What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

காதல் கவிதை

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
ஆணவம் மனிதனுக்குத் தந்த பாடம் நிமிர்ந்து நின்று வாங்கிய அடி தான்.

ஞானம் எப்போதும் பணிந்து நின்று வெற்றி பெறும்.

வெற்றுக்கண்ணால் உலகத்தை பார்ப்பதை விட அகக்கண்ணால் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.

காலை வணக்கம் நண்பர்களே. 🙏🏼❤️♥️🌺🌹💚💐🌼🍑🍀🌞🌷🙏🏼
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
#ஆண் தன் மனைவியை சொல் பேச்சு கேட்க வைத்த கதை...

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!
==================================
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
பிரியமானவர்களின் சிரிப்பை சிரிப்பாகவே
பத்திரப்படுத்தத்தான்
நாம் இருக்கிறோம்.
அச்சிரிப்பு
நம்மால் மட்டுமே உண்டாக வேண்டும் என்பது சுயநலம்.
அதில் அக்கறை இல்லை. அவர்களின் மகிழ்ச்சிகளுக்குள் உங்களுக்கே உங்களுக்கான ஒரு சிரிப்பு இருக்கும்
அது எல்லா நேரமும் வெளிப்பட்டுக் கொண்டு இருக்காது.

உனக்கான மனமகிழ்வை என்னால் மட்டுமே தரமுடியுமென்பது
போலியான கற்பனை.
இதுவுமே
பெரிய சுயநலம்.
உன் மகிழ்சிக்கு என்னைத்தான் நீ சார்ந்திருக்க வேணும் எனும் மறைமுக கட்டளை....

யதார்த்தம் முகத்தில் அறையும்போது திணறி விடுவிர்கள்.
இணைந்து வாழத் துவங்கும் போதுதான் எதுவெல்லாம் காதலென்று கருதிக் கொண்டிருந்தோமோ
அதுவெல்லாம் காதலே இல்லையென்று புரியும்.
அதனைச் சரியான வழியில் புரிந்துகொள்வதற்கு இப்போதிருந்தே மனத்தை தயார்படுத்துவது முக்கியம்.
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
பிறக்காத சொற்கள்
மௌனம்
ஆகும் !

பிறந்த சொற்கள்
கவிதை
ஆகும் ..!!

பெற்று எடுத்த தாய்மை
உயிர்
ஆகுமே ..!!!

தாய்மை போற்றுவோம் !!

இனிய நாளில் உங்களுடன்
நான் ..!!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மதிய வணக்கம் 🌹 ❤️ 🌹

தேடினாலும் அவளை போல்
ஒருத்தி கிடைக்க போவதுமில்லை

அவள் தேடாவிட்டாலும் என்னை போல் ஒருவன் அவளை காதலிக்க
போவதுமில்லை ❤

என் ஒவ்வொரு கவிதையின் கருவும் ஒன்றுதான்

அது நான் அவள் உலகின் ஒரு பகுதி என்பதே..!!!!💕💕

மார்கழி பனி பொழிவில் இருக பிடித்த தேநீர் கோப்பை அவள்...!

அவள் என் ஆன்மாவிற்குள்
ஒர் ஆவி போல வந்தாள்....!!!!!💕💕

அவள் நினைத்து பார்க்காத இடங்களுக்கும் அவளை அழைத்துச்
செல்வேன்...!!!!!💕💕
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்'.

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி ஓகே நான் கிளம்பறேன்'.

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?'

🍁🌹🍁ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி'

🍁🌹🍁அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?'

🍁🌹🍁அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.

🍁🌹🍁எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.

🍁🌹🍁ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.

🍁🌹🍁அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.

🍁🌹🍁ஒரு சண்டை சங்கிலி தொடர்‌போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.

🍁🌹🍁அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.

🍁🌹🍁இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..
😔😔😔

ஆனாலும் விட மாட்டாங்க🙄🙄

படித்ததில் பிடித்தது 👍🏻
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மாலை வணக்கம் 🌹 ❤️ 🌹

இந்நேரம் அவள் என்ன
செய்துக்கொண்டிருப்பாள் எனும்

சிந்தனையிலேயே விடிகிறது என் காலை

அவள் பாதம் மண்ணில் பட்ட
நாளெல்லாம் மார்கழி மாதம்
உற்சவம் தான்...!

எத்தனை மொழிகள் இருந்தாலும்,
கவிதை என்பது

தமிழுக்கு மட்டுமே சொந்தம்.
❤️நீ கவிதை நான் தமிழ்❤️

காதலுக்கு அழகான
பெண்ணை தேடாத போது

எந்தப் பெண்ணுக்கும்
அன்பைக் கொடுக்கும் போது

அவள் அழகாக இருப்பாள்..💝
மீண்டும் மீண்டும் எத்தனை

முறை பார்த்தாலும் சலிக்கவே
சலிக்காத ஓவியம் அவள் ❤

விடிந்ததும் விண்ணில் வரும்
விண்மீன் அவள் 💃
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
உருவமில்லாத
அன்பில்தான் எவ்வளவு
அழகு கொட்டி கிடக்கிறது
அதை கொடுப்பவர்களும்
பெறுபவர்களும்
அதிர்ஷ்டசாலிகளே
நம்மை போல் 💞💗💗💗💗
Happy night 🎈
இனிய இரவு வணக்கம்
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய இரவு வணக்கம் 🌹 ❤️ 🌹

ஆகாயம் என்பது
இல்லாமல் போகலாம் ❤️

ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம் ❤️♻️🧸

கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதலே ❤️

கறை மாற்றி நாமும்
மெல்ல கரையேற வேண்டுமே ❤️♻️🧸

தோன்றி மறைகிறாய் தொல்லை என்ற
பெயரில் இனிக்கிறாய்

நிலவை போல் பின் தொடர்ந்து
என் இரவை நிறங்களாய் மாற்றுகிறாய்..!

நீ வந்த நாளெல்லாம் என் திருவிழா நாளே தேதி குறிப்பிடாமல் !

இந்த பிரபஞ்சத்தின் மொத்த அழகு
இவள்

ஒரு தராசில் வைத்தால் கூட இவளின் அழகே எடையுடைதாக இருக்கும்
♥️😍💞💞🫀🫀
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
*காலம் ஒரு போதும்* *காத்து இருப்பதில்லை*
*எனவே*

*பேச வேண்டியதையும்*

*சொல்ல வேண்டியதையும்*

*கேட்க வேண்டியதையும்*

*சந்தர்ப்பம் கிடைக்கும்*
*போது கேட்டுவிடுங்கள்*

*பிறகு வாய்ப்பு கிடைக்காது..!*
🍇🍇🍇🍓🍓🍓
*இனிய நற்காலை வணக்கம்.*🙏🙏🙏🙏🙏🙏
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
உறுதி பெறாமலே உடைந்து போகும் மணல் சிற்பம் போல நிறைவு பெறாமல் சிதைந்து போகும் மன கற்பனைகள்...

வானமே கிடைப்பது போல் பறந்து ஆட்டம் போடும் கத்தாடிகள்...

ஊஞ்சல் துள்ளல் போல தாவி மகிழும் ஆசை மனங்கள்...

ஊசி மீது நின்று நாட்டிய நாடகம் போடும் பலூன் பொம்மைகள்...

பாறையில் எத்தனை மோதினாலும் சேதாரம் இன்றி மீண்டும் மீண்டும்.
கடல் திரும்பும் அன்பெனும் சோக அலைகள்...

சோர்ந்து விடாமல் வாழ்ந்து விடும் பாச அன்பே...

அன்புடன் அழகிய இனிய காலை வணக்கம் 🌹🌺🌹
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
காலையில் கண் விழித்து வெளியே வந்து பார்த்தால் பரந்து விரிந்த பசும்புல் கண்ணுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

பசுமையான புல் விரிப்பில் ஆங்காங்கே தலைகாட்டும் சின்ன பூக்களோ மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்திடும்.

அதுபோல வாழ்வின் அழகுக்கு சுவராஜ்யம் கூட்ட சின்னஞ்சிறு ஆனந்த நிகழ்வுகள் மிகவும் அவசியம் ஆகின்றன.

காலை வணக்கம் நண்பர்களே. 🙏🏼❤️♥️🌹🌷🌞🍀🍑🌼💐💚🌺🙏🏼
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய காலை வணக்கம் 🌹 ❤️ 🌹

நீ நான் நாமாகும் பொழுதில் மட்டுமே ..
வாழ்க்கை எளிதாய் தோன்றுகிறது...

மனதின் சுமை தொலைந்து....

யாரிடமும் காயப்படாத வரை
நம் மனதும் அழகு தான்...!

யாரையும் காயப்படுத்தாத வரை
நம் சிரிப்பும் அழகு தான்...❤️

இடைதொட்டு இதழ்பதித்த
இமைப்பொழுதிலே

இறந்திருக்கலாம் நான்
இடைவிடா வாட்டும்

இன்பச்சிணுங்கலை
இனி எப்படிசொல்லவேன்

உன் அருகாமை, அது எனக்கொரு
தனி பிரபஞ்சம்..!! ❤️

காலை வானம் சிரிக்கிறது ☁️
பூக்களின் மெல்லிய முகம் மலர்கிறது 🌷

காற்றில் ஒரு இனிமையான 😋
வாழ்வின் புதிய அத்தியாயம்

தொடங்குகிறது🎀
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
ஒன்றும்
பேசவே வேண்டாம்
வெறுமனே
மௌனித்து போக
பார்வையில்
உயிர்பறிக்கும்
பாடத்தை
எங்குகற்றாளோ?

உதடுகளை
சுழித்தவளும்
உமிழ்கின்ற
சொற்களுக்காக
உன்மத்தமாய்
காத்திருக்கேன்
உருட்டுவிழிகள் ஊமையாயிப்பதேன்?

குழிவிழுகின்ற
கன்னங்களில்
கொண்டாடும்
முத்தம் எல்லாம்
வழிவிட்டதுவே
வந்து மோதும்
மென்மோகத்தின்
வாஞ்சைக்காகவே!

நேர்பார்வையிலே
நிறுத்தாமல்
யுத்தம் நடத்தி
நிராயுதபாணியெனை
கூர்முகைகள்
கொண்டுதான்
கொல்கின்றவித்தை
குதூகலம்தானே!
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மதிய வணக்கம் 🌹 ❤️ 🌹

தெளிந்த நீரில் தெரிந்த முகம் போல
கனவில் உதித்த காதல் கவிதை நீ..!

மெல்லிய காமம் ருசிக்காமல், மென்மை காதல் இன்னிக்காது... ❤️‍🔥❤️‍🔥

காதலில் மெச்சூரிட்டியை கலக்காதீர்கள்...

சல்லிதனங்களில் இன்பம் காண்பதே
இனிமையான காதல்...❤❤💘

பொய் கலந்து மகிழ்ந்திருந்து
மெய் உணரும் போது

முறைத்துக்கொள்ளும் ....
பெருங்காதல்

உன்னை பாதுகாக்கும் விடயத்தில்
என் காதல் பயமற்றது..!!!!💕💕

பேசாமல் உதாசீனப்படுத்துவது அல்ல எனது காதல்

பேசியே உருகவைப்பதல்லவா
என் காதல் 🫶
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய மாலை வணக்கம் 🌹 ❤️ 🌹

Hello February ❤️😍❤️😍❤️😍
இது காதல் மாதம் ❤️💜💐

ஏதோ காதல் மாசமாம் வருஷத்துல ஒரு மாசமாவது என்ன கண்டுக்கலாம்ல ...

ஒரு கோப்பை நீலவானம்,
ஒரு தேக்கரண்டி கார்மேகம்,

ஒரு துளி மலைச்சாரல்,
ஒரு சிட்டிகை காதல்,

உன் ஒற்றை பார்வையில்
வெட்டும் மின்னல்..

இவைகளை கலந்த ஒர்
கவிதை சமைப்போமா ...!!!

வாழ்வதில் தான் இன்பம் உழைப்பதில் தான் வாழ்வு..

நேற்றைக்கு இந்நேரம்..,
போனவாரம் இந்நேரம்..,

போனமாதம் இந்நேரம்..,
போனவருடம் இந்நேரம்..,

இம்மாதிரியான நினைவுகளை என்றும் நான் நினைத்திடவே

என் வாழ்வில் வந்தாயோ..
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய இரவு வணக்கம் 🌹❤️🌹

நெஞ்சில் நிறைந்து வழிகின்ற
எஞ்சிய ஏக்கங்கள் தீருமா....

உனைக் காண காத்திருக்கும்
என்னிரு விழிகளின் பார்வை உணரும் ...

வளைந்து செல்லும் பாதைகளில் நீயும் நானும் கை கோர்த்து காதல் நினைவுகள்

பேசி கொண்டு நடந்து செல்ல வேண்டும்

பாதை முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்ல வேண்டும்.❤️❤️

ஆயிரம் போதைகள் கண்டவன் நான்....
ஆனாலும் அடிமை ஆகவில்லை....

என்னவள் அன்பு ஒன்றை தவிர....

உண்மையான அன்பு ஒருவர் இருக்கும்
இயல்பிலேயே நேசிக்கும்.

அழகு அறிவு பணம் பார்க்காது.

அன்பு என்பது பிடித்தவர்கள்
ஆள்வதற்கு அல்ல

அவர் மனதில் நிரந்தரமாக
வாழ்வதற்கே
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
அன்பின் இனிய காலை வணக்கம் 🌹 ❤️ 🌹
நினைவுகள் முழுதும் நீ தான்
நிறைந்திருக்கிறாய்

கவிதையென்றாலும் அழகு என்றாலும்
உன் நினைவுதான் என்னை பற்றுகிறது

எழுத நினைத்தாலும் பேச நினைத்தாலும்
உனைத்தான் என் மனம் வட்டமிடுகிறது

வியந்து வியந்து மயங்குகிறேன்... 💕💕
உனை பற்றியே.... 🎶🎶

இங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை
வாழ்றதுக்கே

பல ஆசைகளை
இழக்க வேண்டியிருக்கு ...

பூக்களால் ஆனது என்றாலும்
பூங்கொத்துக்கும்

மலர் வளையத்திற்கும்
நிறையவே வித்தியாசம் உண்டு..

அதுபோல தான்
சில மனிதர்களும் சில உறவுகளும்..🫰
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
தேவையான இடத்தில் பேச மறப்பது
அதை மறந்தார் நடிப்பதும்
பெண்ணின் குணம்.
காரணம்
நாளை எதுவும்
நடக்காமல் இருக்க

அவள்நலிணமே
காரணம்
இன்பத்தில் ஒரு கூடல்
இதயத்தில் ஒரு பாடல்
இருந்தும்
அவள் இதயத்தில்
ஒரு
தேடல்.

இனிய காலை வணக்கம் 🙏
 

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,399
Points
133
Location
Chennai
*சிலருடன்
எண்ணங்களில் இருப்போம்......*

*சிலருடன்
எண்ணியபடி இருப்போம்....*

*சிலருடன்
எண்ணிக்கையில் இருப்போம்......*

*தூய அன்பு கொண்ட
சிலருடன் மட்டுமே
#என்றென்றும் இருப்போம்...!!!*
இனிய காலை வணக்கம்
உறவுகளே 🙏🏼
 
Top