What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
உத்தமர் இயேசு ஜனநாயக முறைப்படி சிலுவையில் அறையப்பட்டார் என்பது வரலாறு. ரோமப் பேரரசின் பிரதிநிதி பொந்தியு பிலாத்து வள்ளல் இயேசுவின் மீது யோக்கியர்களால் குற்றம் சாட்டப்பட்டு கொண்டுவரப்பட்ட போது அவ்வழக்கை தானே விசாரித்த பிலாத்து சொன்னது - இந்த மனுஷனின் மேல் நான் ஒரு குற்றமும் காணேன். நீங்களெல்லோரும் இவரை சிலுவையில் அறையச்சொல்வது என்ன? என்று ஆர்ப்பரிக்கும் "மக்கள் கூட்டத்தை" பார்த்து கேட்டார். "மக்கள் கூட்டமோ" அவன் தேவ குற்றம் செய்தவன், அவனைச் சிலுவையில் அறையுங்கள் என்று கூட்டமாகக் கோரியது. அதற்கு பொந்தியு பிலாத்து, இதன் பாவம் என்மேல் படியாது என்று பொதுவிலே அறிவித்து தண்ணீரில் தன் கைகளில் கழுவி அந்த யோக்கியர்களிட ஒப்படைத்தார். அதே "மக்கள்" கூட்டம் வருடா வருடம் வரும் புளிப்பில்லாத அப்ப பண்டிகைக்கு ஒரு கைதியை விடுதலை கோரும் முறையில் அந்த வருடத்து பண்டிகைக்கு கொலையாளி ரௌடி பரபாஸை விடுவிக்க கோரியது. இது 1992 வருகங்களுக்கு முந்தைய ஜனநாயக முறையின் உச்சம்.

ஆனாலும், தற்போது பொதுமக்களில் பெரும்பாலோர் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கட்ட ஆட்சியாளர்கள் ஓரளவுக்கு சரி தப்பு நியாயம் அநியாயம் பார்த்து செயல்படுவார்கள் என்று ஒரு பொய்யான நம்பிக்கையில் வாழ்ந்திருந்தனர். அப்படியெல்லாம் எப்போதுமே இருந்ததில்லை என்பதை நிரூபிக்கிறது சமீபத்தில் நிகழ்ந்த அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கட்சி நிர்வாகம் தன்னுடைய கட்சித் தொண்டனை காத்திட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதத்தனையையும் சடுதியில் செய்து அந்த பெண்ணையும் அவள் குடும்பத்தைப்பற்றிய விபரங்களையும் வெளிப்படுத்தியதில் காட்டிய முனைப்பு.

இங்கேயும் NEET முதலிய 2 கல் உப்பு பொறாத விஷயங்களை அயோய்யோ அய்யோய்யோ என்று அரற்றி ஓலமிடும் நல்லவர்கள் ஒன்றுமே சொல்லாமல் மௌனம் காப்பதும் கவனிக்கத்தக்கது.

இது உள்ளபடியே ஜனநாயக முறையின் உன்னதமான படிநிலை. உச்சம் என்றும் சொன்னாலும் மிகையில்லை. எண்ணிக்கை இருந்தால் எல்ல்ல்லாம் சரிதான். நல்லதாவது கெட்டதாவது. வாழ்க ஜனநாயகம். வருக முரட்டு நம்பர் ஜனநாயகத்துக்கு.
 
Last edited:
Top