What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

யாதும் ஆகிறாய்....

Squareroot

Well-known member
Joined
Oct 8, 2022
Messages
56
Points
58
Thanks a lot for your appreciation @Squareroot

அரிதாரம் என்பதற்கு முக ஒப்பனை என்று சொல்லுவோம். Correct.

அரிதாரம் என்பதை முகமூடியாக கொள்ளலாம் இங்கே. mask பூசிக் கொள்ளும் போது உண்மை முகம் தெரியாது தானே.. அப்படி..

For example :

இங்கே நான் வெண்ணிலா. நீங்க square root. Nan msd dp. Ninka Carlsen dp. Ithu than nama aritharam...

Like this Facebook Instagram la kuda original ilama oru face oru name vekravanka irukanka. Pen name madhri... athula neraya articles kuda ezhuthuvaanka... original identification ilatha oru mugam...

So mask nu eduthukalaam
Unga Concept Okay. Mask ku "Aridharam" opt aana word ila. I think

Example:
"அரிதாரம் பூசாத அன்பில், தெய்வத்தின் அவதாரம் அம்மா "

"அரிதாரம் இல்லாத உன் அழகை "

அரிதாரம் : Make up panrathuku use panra oru thing.. Mask ku opt aana word ah irukathu..
 
Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
804
Points
113

அரிதாரம் makeup items

அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை

Avatharam movie songla ilayaraja composs pannunathu

Mask mugamoodi sollalaam பாதுகாப்பு திரை இப்படி

இந்த அரிதாரம் மெய்நிகர் உலகிற்க்கானது. சமூக வலைதளங்களில் கூட அதே அரிதாரம். அவனின் அடையாளம், அறியப்படாத ஒரு இரகசியம்...

makeup potta unmai mugam theriyathula athai kurupittu ezhuthirukaanga appadithaana...🤔
 
Last edited:

Ilayaraja Song Reference Super... Yeah apdi than ninichi use panirukanga..
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,900
Points
153
அரிதாரம் என்பது நாடகம், கூத்து என நடிக்கும் கலைஞர்கள் முகமே தெரியாத அளவு வண்ணங்களில் முகத்தையே மறைக்கும் அளவு அதிகமாய் பூசிக்கொள்ளும் ஒப்பனை. In English makeup...

கூத்து முடிந்தவுடன் ஒப்பனை கலைந்தால் அந்த உண்மை முகம் வேறு.. யார் அந்த வேடத்தில் நடித்தார்கள் என்றே தெரியாது...

மெய்நிகர் உலகு என்றில்லை... உண்மை உலகிலும் கூட எத்தனை அரிதாரங்கள் பூசிக் கொள்கிறோம்.. நேரடியா make up nu eduthuka iyalaadhu.. neraya meanings varum ..😄 chill 😎
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,900
Points
153

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 11

"பிடிவாதம் பிடிக்கிறோம்
பிரபஞ்ச ஆற்றலிடம் ..
பிரிக்குமா சேர்க்குமா??"

images (6) (17).jpeg

Frankfurt International Airport:

'காவின் ??'

'யெஸ்..கவின்...

What is the purpose of your visit ?

....
...
...

அதிகபட்சமாக நான்கு ஐந்து கேள்வி பதில்களில் இமிகிரேஷன் (immigration) முடித்துவிட்டு, கன்வேயர் பெல்ட்டில் அலைபேசியை பார்த்துக் கொண்டே காரியத்திலும் கவனமாய் இருந்தான்...

அவசர கதியில் சமூக வலைத்தளத்தில் லாகின் செய்து பதில் அனுப்ப மறுபடியும் முயற்சிக்கலாமா எனத் தோன்றியது..

இல்லை வேண்டாம். அறைக்குச் சென்றபின் அனுப்பிக் கொள்ளலாம் என மனதை கடிவாளமிட்டுவிட்டு அமைதியானான்.

அழைத்துச் செல்ல அவனின்

அலுவல் நண்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான்...

"பட்டாசு சத்தங்கள்
கட்டியம் கூறின
பண்டிகையின் வருகையை

பட பட என எடுத்துச் சொல்லி..."

இரண்டு நாள்களில் தீபாவளி...

மரூன் (maroon ) நிறத்தில் தங்க திற சரிகையில் ஆங்காங்கே டிசைன் போடப்பட்ட அழகிய ஜார்ஜெட் புடவையை மீனுவிற்கு வாங்கி வைத்திருந்தார்கள்....

ஆச்சி ஒரு பக்கம் பணிப்பெண்களோடு கைமுறுக்கு அதிரசம் எல்லாம் செய்து கொண்டு வேலையில் பிசியாக இருந்தார்...மீனுவின் வாடிய முகத்தை கவனிக்காமல் விட்டு விட்டார்.

எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்தில் வேலையில் மூழ்கியிருந்தனர்...

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்தாள் ...

பிறகு பொறுப்பாய் அவளும் வேலைகள் அலங்கரிப்புகள் என மனதை அவற்றில் செலுத்த ஆரம்பித்தாள்...

இரவில் தூங்கும் முன்
பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்...ஏமாற்றமும் ஏக்கமுமாய் ஒரு மன நிலை..

அவன் :

அறை சென்று தயாரானவன் , அனுப்ப இயலாமல் விட்டுப்போன அவனின் வரிகளை அவளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்....

"இருக்கும் நாள்களில்
சேர்ந்திருக்க விழைகிறேன்...

இக்கணம் முதல் இம்மைக்கும்...
இலக்கியமும் இலக்கணமுமாய்...

இணைந்து விட இசைவாயா .."

கூடுதலாய் சில வரிகளை இணைத்தான்....

"கவிதையில் கதைப்பதும்

பாராமல் பரிதவிப்பதும்
போதுமென எண்ணுகிறேன்...

யாதும் ஆன என்னவளே!!
எண்ணத்தை அறிவிப்பாயா"

இவண்,

கவின் ...(Kavin)

அவனின் பதிலோடு பெயரையும் அவளுக்கு அறிவித்து விட்டு ..

அவளைப் பற்றி யாதும் அறியேன் எனும் நிலையிலேயே... பயணக்களைப்பில் கண்ணயர்ந்தான்.

அவள் :

மாலையில் அத்தை , சித்தப்பா குடும்பங்கள் எல்லாரும் வரவும் வீடே தீபாவளிக் கோலம் பூண்டது...

இரவில் மீனுவின் கைகளையும் பாதங்களையும் விலங்கிட்டினர். மருதாணி அரைத்து வைத்து விட்டுருந்தனர்...

'காலைல வரை விடனும். அப்போதான் நல்லா சிவக்கும்...'

பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது.. காலை வரை எப்படி இருப்பது என தவித்துப் போனாள்..

மனம் முழுக்க அவனே.. ஒருவேளை வந்து படித்திருப்பானோ...பதில் அனுப்பியிருப்பானோ.. இல்லை கோபத்தில் இருப்பானோ...

அதிகம் யோசித்ததில் உறங்கிப் போனாள்.

"கணப்பொழுதும்
பெரும் சுமையாய் கனக்கிறதே .....
காத்திருப்பிலும் காதலிலும்"

காத்திருப்போமா ???

- வெண்ணிலா
 
Last edited:

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
4,145
Points
133

வெண்ணிலா

Sonna maari Avan vandhutana😍
Rendu perum hide and seek game vilaiyaduraangala
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,900
Points
153

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 12

அணைக்க அழைக்கும்
அழகா !!!!

அணையா தழலிட்டு

ஆராதிக்கும் அழகா !!!!

images (6) (19).jpeg

அவன்:

அலுவல் பணிகளில்.. கருத்தரங்குகளில் நிற்க நேரமின்றி அவனின் அந்த நாள் ஓடிக் கொண்டிருக்க ...

இரவில் தாமதமாய் அறைக்குத் திரும்பியவன் , மடிக்கணினியை சார்ஜில் இணைத்தான். ..
உறங்குவதற்கு முன் அவளின் பதிலை பார்க்க வேண்டும்...

அவள் :

பெண்ணவள் கரம் பட்டதால் வெட்கிச் சிவந்திருந்த மருதாணி, அதிகாலையிலேயே அவளை எழுப்பி விட்டு இருந்தது தன் வெட்கச் சிவப்பை அழகைக் காட்ட...

'நல்லா சிவந்திருக்கு மீனுக்குட்டி...'

ஆச்சி கண்ணேறு (திருஷ்டி)கழித்தார் எல்லாருக்கும்.

அவசரமாய் தயாரானவளை ஆளாளுக்கு ஏதாவது பேசி பிடித்து வைத்துக் கொண்டனர்.. ஒருவழியாய் தப்பித்து அறை சென்றவள், அலைபேசியில் லாகின் செய்து விட்டாள்.

'கவின்ன் !!!!' சொல்லிப் பார்த்தாள்..

கண்களில் நீர்த் துளிகள் குளமிட்டன.. விட்டால் வெள்ளப் பெருக்கு எடுத்து விடுவோம் என்பது போல...

உணர்வுகளின் பிடியில் சிறிது நேரம் அப்படியே இருந்தாள்...

'இக்கணம் முதல் இம்மைக்கும் ' வரிகளை மறுபடியும் வாசித்தாள்...

"இதயம் குளிர்கிறதே சில்லென்று...

இறக்கைகள் விரிகின்றனவே
படபடவென்று அடித்துக்கொண்டு...

இனம் விளங்கா உணர்வாய்.... "

யாரிவன்... ? எதுவுமே தெரியாது..
முகம், வயது, கல்வி, பணி, வாழ்க்கை நிலை எதுவுமே தெரியாது..

ஏன் ஈர்க்கப்படுகிறேன்...
ஆனால் நம்பிக்கை மட்டும் மலைபோல் குவிந்து கொண்டே போகிறதே...
ஒன்று மட்டும் புரிகிறது தெளிவாய்.. அவன் வேண்டுமென்பது
உறுதியாகத் தெரிகிறது.

உள்ளத்தின் உள்ளுணர்வு வழி நடத்த அதன் போக்கிலேயே சென்றுவிட வேண்டும்.. பிரபஞ்ச சக்தி பார்த்துக் கொள்ளும்...

"கவி பாடிய ...
கவின்முகம் காண...
கதைகள் பல பேசிட...
கவிழ் முகத்தொடு...
கால்கள் கோலமிட...(நாணமாம்)

காத்திருக்கிறேன்..."

இவள் ,

மீனு....

அனுப்பிவிட்டு உறவுகளுடன் கலகலப்பாய் பேசிட கிளம்பி விட்டாள்... முகம் பரவசம் காட்டியது மகிழ்வில்...

images (6) (18).jpeg

அவன்:

படுக்கையில் சரிந்து அமர்ந்தவாறு வாசித்துக் கொண்டிருந்தான்...

'மீனு....!!!'

மெல்லிய நகை இதழோரம் வந்து சென்றது...

"தேடும்
மீனுவின் மீன்களில்
விழுந்து பிரதிபலிக்கும்
கவினின் முகம்....
நாளைய நன்னாளின்
விடியலில்...."

இவண்,

கவின்...

புலனத்தின் (whatsapp) எண்ணை அதனோடு சேர்த்து பதிவிட்டு அனுப்பினான்.

தீபாவளி :

மரூன் நிற புடவையில் மருதாணியும் போட்டியிட ...மாணிக்கக் கற்கள் (ruby) பதித்த தோடுகளுடன் அலைபேசியின் முன் அமர்ந்திருந்தாள்...

மிளகிட்டு காய்ச்சிய நல்லெண்ணெயில் குளித்த தலைமுடி பட்டு போல் காற்றில் ஒருபுறம் ஆடியது...

கவினின் whatsapp எண்ணிற்கு,

'ஹலோ , மீனு ஹியர் ..'

என அனுப்பி விட்டு காத்திருந்தாள்...

பதில் வரவில்லை..

அழைப்பு வந்தது... காணொளி அழைப்பு....

சந்திப்போமா...??

- வெண்ணிலா
 
Last edited:

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
4,145
Points
133

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 12

அணைக்க அழைக்கும்
அழகா !!!!

அணையா தழலிட்டு

ஆராதிக்கும் அழகா !!!!

View attachment 20582

View attachment 20583

அவன்:

படுக்கையில் சரிந்து அமர்ந்தவாறு வாசித்துக் கொண்டிருந்தான்...

'மீனு....!!!'

மெல்லிய நகை இதழோரம் வந்து சென்றது...

"தேடும்
மீனுவின் மீன்களில்
விழுந்து பிரதிபலிக்கும்
கவினின் முகம்....
நாளைய நன்னாளின்
விடியலில்...."

இவண்,

கவின்...

புலனத்தின் (whatsapp) எண்ணை அதனோடு சேர்த்து பதிவிட்டு அனுப்பினான்.

தீபாவளி :

மரூன் நிற புடவையில் மருதாணியும் போட்டியிட ...மாணிக்கக் கற்கள் (ruby) பதித்த தோடுகளுடன் அலைபேசியின் முன் அமர்ந்திருந்தாள்...

மிளகிட்டு காய்ச்சிய நல்லெண்ணெயில் குளித்த தலைமுடி பட்டு போல் காற்றில் ஒருபுறம் ஆடியது...

கவினின் whatsapp எண்ணிற்கு,

'ஹலோ , மீனு ஹியர் ..'

என அனுப்பி விட்டு காத்திருந்தாள்...

பதில் வரவில்லை..

அழைப்பு வந்தது... காணொளி அழைப்பு....

சந்திப்போமா...??

- வெண்ணிலா
சந்திபோமே😍
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,900
Points
153

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 13

"அறிமுகங்கள் தேவையில்லை...

யுகங்கள் பலவற்றில்...

தெரிந்திருந்த அகங்களுக்கு..."

Screenshot_20241106_105123_Gallery.jpg

'ஹலோ... மீமீனூனூ...'

'ஹலோ...'

'எப்படி இருக்க..??

..... ருக்கீங்க ...??'

ஒரு சேர வினவிக் கொண்டனர்....

'தீபாவளி வாழ்த்துகள் ...'

'ஹேப்பி தீவாளி கவின்'

"சீராய் முடியப்படா
கூந்தலில் சிக்க வைத்து..

சிகப்புத் திலகமிட்ட
நுதலில் சறுக்கிடச் செய்து...

சரியாய் திருத்தப்படா
வில்களை ஏற்றி இறக்கி...
நாணமுடன்... நாணேற்றுகிறாள்...

நான் என்பது அற்று

வீழ்கிறேன் நயன அம்புகளில்..."

என்ன செய்கிறாய்..

என்ன படித்தாய்...

என்ன சமயம்...என்ன இனம்...

குடும்பப் பின்னணி என்ன...

பொருளாதார நிலை என்ன...

வயது என்ன...

நேசிக்கறாயா...

பிடிச்சிருக்கா ..

எதுவுமே வினவப்படவும் இல்லை.. பகிரப்படவும் இல்லை....

சராசரி நிலை கடந்த கட்டுப்பாடற்ற அந்த காதலில்.. நடைமுறை வாழ்வியல் தேவைகள், ஆராய்ச்சிகள், தேடல்கள் தோன்றிடாமல் தோற்றன...

என் தேடல் நீ மட்டுமே..
உன் தேடல் நான் மட்டுமே என ....

இது எப்படி சாத்தியம்... கண்மூடித்தனமான காதல் எனத் தோன்றிடும்.. முட்டாள் தனமாயும் தெரிந்திடும்...

அவனுக்கும் அவளுக்குமான மனங்களின் புரிதலும் ..உணர்வுகளும்.. இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருந்தது...

தான் எங்கே இருக்கிறேன் என அவன் சொல்லவில்லை...அவளும் கேட்கவில்லை...

'எப்போ சந்திக்கலாம் மீனு... எங்கேனு நீயே சொல்லு...'

இருவரின் வாழிடமும் பணியும் ஒரு ஊரில் தான் என அறியாமலேயே சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்...

அவனும் தான் தற்போது ஐரோப்பாவில் இருப்பதை சொல்லிக் கொள்ளவில்லை.. .. காணொளியில் பின்னணியை கவனித்து இருந்தால் அறையின் சாளர வேறுபாட்டில் வேற்று நாடு என புலப்பட்டிருக்கும்.. அவள் தான் அவன் கண்களிலேயே நிலைத்து இருந்தாளே...

'நிறைய பேசலாம் மீனு... மெதுவாய் அறிந்து கொள்வோம் நம்மை...'

'ஷ்யூர்...'

'எங்கே உள்ளங் கைகளை காட்டு...'

'மருதாணி அழகா இருக்கு...'

விடைபெறுமுன் சொன்னான்...

'அழகா இருக்க மீனு...'

'நீங்களும்...'

'அப்டியா ??'

'ஆமா...'

'ஹா ஹா...'

பேசி முடித்தும் சிறிது நேரத்திற்க்கு பட்டாம்பூச்சிகள் படபடத்தன அவளுக்குள்...

அன்பும் கனிவும் சிரிப்பும் கலந்த அவனின் வசீகர முகம் , வாஞ்சையாய் பார்த்த அந்த விழிகள் ஆயிரம் கதைகள் சொல்லின...

கம்பன் வருணித்த,

'அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா'

எனும் இராமனின் மலர்ந்த முகத்தை நினைவு கூர்ந்த அவளுள்... அவன் மலர்ந்தான்...

"கவி யெழுதும் அகத்தின்
கவின் (எழில்) முகனின் ....

துதி பாடிட...
கற்றது போதவில்லை...

கனிவில் போதை கொண்டு...

களிப்பில் மிதக்கிறேன்...."

கதைப்போமா???

-
வெண்ணிலா
 
Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
804
Points
113

யாதும் ஆகிறாய்

அத்தியாயம் 13

"அறிமுகங்கள் தேவையில்லை...

யுகங்கள் பலவற்றில்...

தெரிந்திருந்த அகங்களுக்கு..."

View attachment 20596

Wow wow அழகிய காதல் ❤️❤️

காதல் மலரும் தருணம்
கதைக்க எண்ண துடிக்கும்
இரு மனமும்
நாணமும் நகைப்பும் நலிந்து செல்ல,
நாட்பொழுதுகள் மறந்து கிடக்க,
ரசித்த மனம் தித்திப்பில் மிதக்க, சொல்லாத இவ்வுணர்வு
சுகமாகத்தான் நீடிக்கும் இவ்வுறவு....

நாவலின் அடுத்த அத்தியாயத்தை
ஆவலுடன் வாசிக்க காத்திருக்கும் நான்.....❤️❤️
 
Video call ah 😱 ok last athiyayam end layae potrukeenga... காணொளி அழைப்பு nu...miss panniten...

என் தேடல் நீ மட்டுமே..
உன் தேடல் நான் மட்டுமே😍😍

நிறைய பேசலாம் மீனு... மெதுவாய் அறிந்து கொள்வோம் நம்மை😍😍

கனிவில் போதை கொண்டு

கதைப்போமா???
😍😍😍😍

கதைப்போமே!!

கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா

ஒன்றாக நீயும் நானும்தான்
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Top Poster Of Month
Joined
May 27, 2023
Messages
3,900
Points
153
நாணமும் நகைப்பும் நலிந்து செல்ல,
நாட்பொழுதுகள் மறந்து கிடக்க,
ரசித்த மனம் தித்திப்பில் மிதக்க, சொல்லாத இவ்வுணர்வு
சுகமாகத்தான் நீடிக்கும் இவ்வுறவு....
Beautiful da ❤️ 💙
 
Top