தோழி
@Sound24
புத்தகத்தின் பெயர் : தமிழக வரலாறு,மக்களும் பண்பாடும்
காரணம் : சவுண்ட் என்னும் புனைப்பெயர் கண்டதும் ஆறு திரைப்படத்தில் வரும் சவுண்ட் சரோஜா காதபத்திரத்தை பிரதிபலிப்பார் என எதிர் பார்த்தால் இவர் பூவேலி திரைப்பட மஹாவை நினைவூட்டும் விதத்தில் இருக்கிறார்(மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்

) . இவரை தற்போது தான் இந்த பொதுமன்றத்த்தில் காண்கிறேன்.யார் எவரென எதுவும் தெரியாது . ஆனால் இவர் பேசும் பொது இவர் குரலை கொண்டு இவர் அயலகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர் என எனக்கு தொன்றிடவே இவருக்கு இந்த புத்தகத்தினை பரிசளிக்கிறேன்.
View attachment 22815
தோழி
@Vanathi
புத்தகத்தின் பெயர் : பொன்னியின் செல்வன்
காரணம் : பொதுமன்றத்தில் நீண்ட நாட்களாக இவரை கண்டாலும் அதிகமாக பழகியது இல்லை. எனினும் அதீத திறமைக்கு சொந்தக்கார இவர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. பெரும்பாலும் அமைதியாக இருந்து நடப்பவற்றை கண்காணிக்கும் இவர் நாம் 10 வரி பேசினால் ஒரு வரியில் தனது கருத்தை தெரிவித்து பிரம்மிப்பூட்டுவார். ஆகையால் அந்த அமைதியான தருணங்களில் இவர் படிக்க இந்த நீண்ட புத்தக தொகுப்பை பரிசளிக்கிறேன்..
View attachment 22816
தோழி
@Nilaa
புத்தகத்தின் பெயர் : தமிழ் இலக்கிய தகவல் களஞ்சியம்
காரணம்

இவரின் பெயர் மட்டும் அகர வரிசையில் ஏன் இடம்பெற வில்லை என நீங்கள் கேட்கலாம். என்னை இக்கட்டில் நிறுத்திய இவரை இறுதியில் வச்சு செய்யவே இவரை பற்றி இறுதியாக சொல்கிறேன்)
அரட்டையில் அறிமுகமாகி எனது கவிதைகளை ரசித்து இந்த பொதுமன்றத்திற்கு அழைத்து வந்த நல்ல காரியத்தை செய்த நல்லவர் இவர்தான். அதோடு நின்றிருந்தாள் பரவாயில்லை போன பிக்பாஸ் போட்டியில் என்னை சேர சொல்லி கட்டாயபடுத்தி பின்னர் எனது வெற்றியை ஒரு புது சட்டம் உருவாக்கி தட்டி பறித்த கெட்டி காரர்



(என்ன செய்ய வன்மத்தை கக்கி தான் ஆகனும்


) இந்த ஆட்டத்திலும் நான் சேர இவரே காரணம். இரண்டு முறை என்னை டேக் செய்து அழைத்ததால் தான் மறுக்க முடியாமல் இந்த போட்டியில் நான் கலந்து கொண்டேன். சரி எல்லாம் இத்தோடு போகட்டும்.
விளையாட்டுக்கு அப்பாற்பட்டு மிக நல்ல மனிதர். அழகிய கவி திறன் கொண்ட மாமனிதர் . இவர் இயற்றும் கவிதைகள் கண்டு நான் வியந்தது அதிகம். சொல்லின் செல்வி என்னும் அடைமொழிக்கு சொந்தக்காரர். அகவை குறைந்த ஒளவையார். இப்படி எத்தனை அடைமொழிகள் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் பொருத்தமான இவருக்கு இந்த புத்தகத்தை பரிசளிப்பதில் பெருமை கொள்கிறேன்.
View attachment 22817