Task 2
@secret santa neenfa keta mathiri eluthiruken . Mng I have important wrk so ipove eluthi post paniten .
Ennai ரசிப்பதற்கு நன்றி

சிந்தனை சிற்பியாய் வந்தவளே
என் சிந்தைக்கு பணியும் தந்தவளே
நீ தரும் பணிகள் என் திறனை
மெருகேற்றிட வந்ததாய் என்னுகிறேன்
திருக்குறள் எழுத நீ சொல்ல - என்னை
வள்ளுவன் போல நான் உணர்ந்தேன்
கவிதை ஒன்றை நீ கேட்க
ஒரு கம்பனாய் மாறி எழுதுகிறேன்
கட்டிளம் காளை நானுமல்ல
ஒரு கவர்ச்சி நாயகன் தானுமல்ல
இருப்பினும் நீ தரும் பணிகளிலே
என் இளமை திரும்புதே எப்படியோ?
ராட்டினம் போல சுற்றுகிறேன்
நான் காற்றினில் வீணை மீட்டுகிறேன்
என்னை ரசித்திடும் உனக்காக
இங்கே எட்டாம் அதிசயம் நிகழ்த்துகிறேன்
உனக்கென வண்ணத்தில் கவி எழுத
வண்ணத்து பூச்சி நான் பிடித்தேன்
அந்நிரம் போதாது என்பதினால்
ஒரு வானவில்லை கட்டி இழுத்து வந்தேன்
இத்தனை சிரமத்தில் இக்கவியை
ஏன் எழுதுகிறாய் என நீ கேட்டால்
அத்துணை அன்புதான் உன்னிடத்தில்
நான் கொண்டிருக்கேன் என கூறிடுவேன்
சொற்களில் சுவை பல இருக்குமின்கே
ஆனால் உன் சுவை சொல்ல ஓர் சொல்லுமில்லை
விளையாட்டு பிள்ளையாய் நீ இருக்க
உன் நெஞ்சத்தில் துளி கூட கள்ளமில்லை
ரகசிய சிநேகிதி உன்னையன்றி
என்னை ரசிப்பவர் யாரிங்கே சொல்லடியே
அதிசயம் போல இங்கு வந்தவளே
என் ஆயுள் முழுதும் நீ வேணுமடி
Night konjqm thookathula eluthanathanala
Intha lines miss panite so last ah itha add panikonga secret santa
என் இனிய சிநேகிதியே
எனக்காக சில டாஸ்குகளை
தினசரி இங்கே நீ தந்து
ரகசியமாய் நீ இருப்பதினால்
ரகசிய சிநேகிதி என்றில்லை
எந்தன் செயல்களை ரசித்திடும்
ரசனையுள்ள சிநேகிதி

